Property division dispute: Grandson killed grandmother along with friends near Perambalur!

பெரம்பலூர் அருகே சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாட்டியை பேரனே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் மனைவி ஜானகி (65), 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவரது மொத்த சொத்துக்களையும் 5 ஆக பங்கு பிரித்து கொடுத்துள்ளார். மேலஉசேன் நகரத்தை சேர்ந்த மகள் வழி பேரனான மணிமாறன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இன்று காலையும் தனது தாய் சகுந்தலாவிற்கு பாரபட்சமாக பிரித்து கொடுத்தாகவும், சரி பங்கிற்கு நிகராக கொடுக்க கூறி பாட்டி ஜானகியிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், மாலை தனது நண்பர்களுடன் வந்த மணிமாறன் தகராறில் ஈடுபட்டதோடு, வாங்கு அருவாளால் வெட்டினான். இதில் வாயிற்கும் கழுத்திற்கு பலத்த காயமடைந்த ஜானகியை அங்கிருந்தவர்கள் அவரை, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் கொலைக்குற்றவாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்,

சொத்திற்காக பேரனே பாட்டியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!