Property issue near Perambalur: Son stabs father to death

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் – கரம்பியம் கிராமத்திற்கும் இடையே உள்ள காட்டுக்கொட்டகை பகுதியில் வசித்து வந்தவர்கள் சுப்பிரமணியன்-அழகம்மாள் தம்பதியினரின் மகன்கள் கருப்பையா (60), பழனிச்சாமி (55). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று தலா ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களது தந்தை சுப்பிரமணியன் கடந்த சில வருட ங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதால், பூர்வீக நிலமான 3 ஏக்கர் நிலத்தை தலா 1.5 ஏக்கர் நிலம் வீதம் தாய் அழக ம்மாள் பேரன்கள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் பெயிண்டர் வேலை செய்து வந்த கருப்பையாவின் மகன் தினேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்காமல் ஊதாரி தனமாக இருந்து வந்த தினேஷ்குமார் தனது பெயரில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை விற்று விட வேண்டும் என முயற்சித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அந்த நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்த தந்தை கருப்பையாவிற்கும்-தினேஷ்குமாருக்கும் இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.
வழக்கம் போல் நேற்று நள்ளிரவு மது குடித்து விட்டு சென்ற தினேஷ்குமார் அவரது தந்தையிடம் நிலம் சம்மந்தமாக பேசி நீ உயிரோடு இருப்பதால் தான் அதனை விற்க முடியவில்லை என வீண் வம்பு இழுத்து தகராறு செய்துள்ளார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள ஆத்திரமடைந்த தினேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை கருப்பையாவையும், தடுக்க முயன்ற சித்தப்பா பழனிச்சாமியை யும் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பையாவும், பழனிச்சாமியும் மருத்துவமனைக்கு செல்ல காட்டுக்கொட்டகையிலிருந்து ஊருக்குள் நடந்து வந்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த கருப்பையா இறந்து விட்டார். பழனிச்சாமி(56), கத்தி குத்து காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குன்னம் காவல் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த தினேஷ்குமாரிடம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்தை விற்பதற்கு இடையூறாக இருந்த தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரியம்மாபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!