Public awareness programs on the need for 100 per cent voting: Perambalur Collector initiated.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் மூலம் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை பெரம்பலூர் கலெக்டர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிக்கும் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் வாகனங்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்தார்.
100 சதவீதம் வாக்குபதிவு இலக்கை அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு பதிவான இடங்களை கண்டறிந்து, வரும் தேர்தலின்போது வாக்குப் பதிவினை அதிகப்படுத்திட அந்த இடங்களில் அதிகமான விழப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் மூலம் கோலப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இடையே கட்டுரைப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுமக்களிடையே கையெழுத்து பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படடு வருகின்றன.
கொரோனா காலங்களில் நோய் தொற்றினை கட்டுப்படுத்திடும் நோக்கத்தில், 1050 வாக்காளர்கள் மடடும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்கும் வகையில் அமைவதோடு, பொதுமக்கள் அனைவரும் அச்சமில்லாமல் தங்களது வாக்கினை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கடமைகளை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி 100 சதவித வாக்கினை பதிவு செய்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.