Public Relations Camp at Malayalappatti, Perambalur District: Welfare assistance of Rs. 2.10 crore was provided

பெரம்பலூர் கலெக்டரின், மக்கள் தொடர்பு முகாமில் 357 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ . பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

வருவாய்த் துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 188 பயனாளிகளுக்கு ரூ.56,40,000 மதிப்பிலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.1,20,70,000 மதிப்பிலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 8 நபர்களுக்கு ரூ.2.20லட்சம் மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் மூலம் 28 நபர்களுக்கு ரூ.1,51,588 மதிப்பிலும் என ஆக மொத்தம் 357 நபர்களுக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 27 ஆயிரத்து 168 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் சப்-கலெக்டர் (பொ) பால்பாண்டி, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் ஊராட்சித் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!