Public road blocking protesters in Tirupur have denied the basic facilities
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாமுண்டிபுரம் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல மாதங்களக சாக்கடை கழிவுகள் அகற்றப் படாமல் உள்ளது. பல முறை இப்பகுதி பொதுமக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.