Rain today in various locations in the perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் ஆடி, ஆவணிப் பட்டங்களில் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், பருத்தி, தானியம், ஆணமக்கு உள்ளிட்ட தானியம், பயிறுவகைகள், எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்து செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாகுபடியில் அடுத்த கட்ட நடவடிக்கையாக களை அகற்றுதல், மற்றும் உரம் வைக்கும் பணிகளுக்கு நாளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு அது போன்று மழை தொடர்ந்து பெய்தால் தண்ணீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எசனை, கீழக்கரை, இரட்டைமலை சந்து, ஆலம்பாடி, சோமண்டாபுதூர், செஞ்சேரி, குரும்பலூர், செட்டிக்குளம், பாடாலூர், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று, இடி மின்னல்களுடன் மழை பெய்து வருகிறது.