Raising funds for the construction of the Ayodhya Ram Temple in Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பின் சார்பில் அயோத்தி மிக பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டுமான திருப்பணிக்கு
நிதி திரட்டும் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில் முன்பு நேற்று நடந்தது. இதனை ஒட்டி கோவில் முன்புறம் உள்ள கம்பத்து ஆஞ்சநேயர் சன்னதியில் ராமர் திருஉருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை-வழிபாடு நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு விசுவஇந்து பரிசத் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ராம் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். 


இதில் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் திருச்சி மண்டல பொறுப்பாளர் மூத்த வழக்கறிஞர் பிரசன்னம் சார்பில் அவரது மகன் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் திருச்சி விபாக் சங்க சாலக் கிருஷ்ணமுத்துசாமியிடம் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி, நிதிதிரட்டும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.


இதனைத்தொடர்ந்து பெருமாள் கோவில் அக்ரகாரம், தெற்குத்தெரு, கடைவீதி, எடத்தெரு, ஸ்டாம்பு வெண்டர் தெரு, சஞ்சீவிராயர் தெரு, செக்கடித்தெரு, ராமபக்தர்கள், பொதுமக்கள் நிதி வழங்கினர். இதில் பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் ராமசாமி, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மயூரப்பிரியன் மற்றும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!