Ready to do whatever he can to help the school : DATO PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies, express in school management committee restructuring meeting !

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் ட்த்தோ எஸ் பிரகதீஷ் குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம், பள்ளி உதவி
தலைமை ஆசிரியர் முரளி தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.மோகன்ராஜ், மற்றும் கட்டிட குழு தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், பன்னாட்டு தொழிலதிபருமான டத்தோ எஸ் பிரகதீஸ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாணவர்களின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும், பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் 12 பேர், உள்ளாட்சி பிரதிநிதிகள் 2 பேர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஒருவர், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரவி என மொத்தம் 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. பள்ளியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குழுவினர் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்தகூட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டத்தோ. பிரகதீஸ்குமார் பூலாம்பாடி அரசு பள்ளிக்கும், மாணவர்கள் வளர்ச்சிக்கும், பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!