Reconstruction work of Sami idols at Siruvachchur temple: Minister Sekarbabu inspects!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் அருகே மலைக் கோயிலான பெரியாசாமி கோவிலில் உடைக்கப்பட்ட சிலைகளை புனரமைக்கும் பணியை இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் மலைப்பாதையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடந்து சென்று ஆய்வு செய்தார். சாமி சிலைகளை பார்வையிட்டார். அப்போது கோவில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்தும், கூடுதல் வசதிகள் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தற்போது புனரமைப்பு செய்து வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாடகை நிலுவையில் இருப்பதை வசூலித்து திருக்கோவில் பயன்பாட்டிற்கும், ஆக்கிரமிப்பை அகற்றி திருக்கோயிலுக்கு சொந்தமாக்குகின்ற பணிகளும் துரிதப்படுத்தப்படும்.
கலெக்டர் வெங்கடபிரியா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மற்றும் கோயில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.