Resolution at the Tamuekasa Conference to hold a book festival in Perambalur
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பெரம்பலூர் மாவட்ட 8 வது மாநாடு, பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
இம்மாநாட்டில் அரும்பாவூர் வசந்தன் தொகுத்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் வெளியிட்ட புத்தகங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்த மருத்துவர் சி.கருணாகரன் மாநாட்டு தொடக்கவுரை நிகழ்த்தினார்.
திருவாளந்துறை கலைவாணன் வரைந்த ஓவியக் கண்காட்சியினை முனைவர் ம.செல்வபாண்டியன் திறந்து வைத்தார். இம் மாநாட்டில் தலித் படைப்புகள் குறித்த கருத்தரங்கத்துக்கு கவிஞர் யாழன் ஆதி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் அகவி, மௌனன் யாத்திரிகா, உதவி பேராசிரியர் ஸ்ரீதர் முதுகலை ஆசிரியர் சிலம்பரசன் ஆகியோர் தலித் கவிதை சிறுகதை நாவல் அபுனைவு ஆகிய தலைப்பின்கீழ் கருத்துரை வழங்கினர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வகுமார் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் ஏகாதசி மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். கவிஞர்.சத்தியநேசன் சிவக்குமார் பரிவர்த்தனா, யாழினி, கருணைவேந்தன் ஆகியோரின் இசையும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் குமணன் தொகுத்து வழங்கினார்.
பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம் மீண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற உழைத்த மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது.
பெரம்பலூர் மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களின் கலைத்திறன் செயல்பாடுகளை நடத்த பொது வெளி அரங்க மேடை ஒன்றை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கலைத் திறன் வளர்க்கும் நோக்கில் அவர்களுக்கு ஆண்டுதோறும் கலை எழுத்து திறன் போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளிகளில் இலக்கிய மன்றம், நூலகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை புனரமைத்து நன்முறையில் செயல்படுத்த கேட்டுக்கொள்வது.
உலகளவில் பெரம்பலூரில் தொல்லியல் பெருமையை வெளிப்படுத்தும் பொருட்டு பெரம்பலூர் தொல்லியல் ஆய்வு பகுதியாக அறிவித்து தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன முன்னதாக மாவட்ட பொருளாளர் ராமர் வரவேற்றார். சுரேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.