Robbery gang of 5 people near Perambalur in 2 places 11 pound jewelery 20 thousand robbery!
பெரம்பலூர் அருகே 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் துணிகரமாக பூட்டிய வீட்டினுள் புகுந்து 11 பவுன் நகை, ஸ்மார்ட் டிவி, ரொக்கம் 20 ஆயிரத்தை 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் தாக்கியும், கட்டி போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிராக வீட்டில் செங்குட்டுவன் மகன் நவநீதபாலு (வயது 46), ஆசிரியராக உள்ளார். நேற்றிரவு, இவர் தனது இரு மகன்கள் நித்திஷ் 18 , தினேஷ் 18 ஆகியோருடன் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 4 மர்ம நபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து முன் கதவை உடைத்து, வீட்டினுள் நுழைந்து அவர்கள் கத்தி மட்டும் கட்டைகளை காட்டி மிரட்டி 10 பவுன் நகைகள் , மற்றும் சோனி டிவி 1 திருடிக் கொண்டு, வீட்டுக்குள் வைத்து தாழ்பாள் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இன்று காலை வீட்டுக்குள்ளிருந்து கூச்சல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் பொதுமக்கள் மங்கலமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
இதே போன்று, அதே பகுதியில் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வரும் மருதமுத்து மகன் வீரபத்திரன் (வயது 55) . மீனவர். இவரது மனைவி லட்சுமி (38), மகன் தொட்டியதான் (16), மாமனார் பாவாடை (66) ஆகிய நால்வரும் வீட்டில் தனியாக இருந்தனர். நள்ளிரவு 02:30 மணி அளவில் நாய் குறைத்த சத்தம் கேட்டு எழுந்தவர்கள் வீட்டைச் சுற்றி பார்த்த போது, திடீரென சுமார் 25 வயது மதிக்கத்தக்க 5 நபர்கள் வீட்டை நோக்கி ஓடி வர, வீரபத்திரன் தப்பித்து ஓட முயற்சி செய்தார். ஆனால், அவரை வீட்டின் முன்னால் அடுக்கி வைத்திருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் முனையில் வீரபத்திரனை இடித்துத் தள்ளினர். அதில் இடது கண்ணில் காயமுற்று நிலைகுலைந்த வீரபத்திரனை கட்டிப் போட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்த முகமூடி அணிந்த திருடர்கள் வீரபத்திரன் மனைவி லட்சுமியை மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு அரை பவுன் மோதிரம் கொலுசு மற்றும் அலமாரிகளை உடைத்து அதிலிருந்த 20 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து கொண்டு, அனைவரையும் வீட்டுக்குள் விட்டு வெளிப்புறம் தாழ்பாள் போட்டுவிட்டு தப்பித்துச் சென்றனர். இது குறித்தும் தகவல் தெரிந்து மங்கலமேடு போலீஸார் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.