Rock falls near Perambalur: 2 people including lorry owner killed, Collector, SP Visit in person!
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலியானர்கள் உயிரிழந்த சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில், கவுல்பாளையம் கிராமத்தை சின்னப்பன் என்பவரின் மகன் முருகேசன் என்பவர் சொந்தமான குவாரி உள்ளர். அதில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வக்குமாரும் பங்குதாரராக இருப்பதாக கூறுப்படுகிறது. இன்று காலை வழக்கமாக பணிகளை செய்த கொண்டிருந்த முருகேசனின் தம்பியும், லாரி உரிமையாளரான சுப்பிரமணி (40), மீதும், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (36) மீதும் பாறைகள் சரிந்து விழுந்தன, இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, பலத்த காயங்களுடன் கிடந்த செந்தில்குமாரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற, மருவத்தூர் போலீசார் மற்றும் விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் எஸ்.பி மணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.