Rover Chairman Varadarajan’s 79th birth day and inauguration of Good Shepherd Church will be held in Perambalur tomorrow evening.
பெரம்பலூர் மூத்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ரோவர் கல்வி நிறுவனங்களில் நாளை மாலை சுமார் 4.30 மணியளவில், புதிய (குட் ஷிப்பேர்டு | Good Shepherd) நல்ல மேய்ப்பர் சர்ச் திறப்பு விழா நடக்கிறது. அதோடு ரோவர் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் வரதராஜனின் 79வது பிறந்த நாள் விழா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் கோட்ட மறை மாவட்டம் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜுஸ், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.வரதராஜன், பெரம்பலூர் சர்ச் பாதிரியார் ஏ.ராஜமாணிக்கம், திருச்சி விகார் ஜெனரல் பாதிரியார் எல். ஆன்துவன், பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து உரை வழங்க உள்ளனர். நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜான் டிரஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கல்லூரி மேலாண்மை நிர்வாகிகள், முதல்வர்கள், பணியாளர்கள், மாணவர்கள் செய்து வருகின்றனர்.