Rs. 10.84 crore worth of gold and financial assistance to 1,383 beneficiaries: Perambalur Collector presented in the presence of MLAs.
பெரம்பலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 383 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
பெரம்பலூரில் சமூக நலத்துறை சார்பில் ஏழை ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி, மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா
ஆயிரத்து 383 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கி பேசுகையில், தமிழக அரசு பெண்களின் வாழ்க்கைதரம் முன்னேற்திற்காகவும், பெண் கல்வியினை ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில், பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும் தமிழகஅரசு ஏழைபெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்த 585 ஏழை பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.1.46 கோடி நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.2.28 கோடி மதிப்பிலான 4,680 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 798 ஏழை பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.50ஆயிரம் வீதம் ரூ.3.99 கோடி நிதியுதவியும், தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.3.11 கோடி மதிப்பிலான 6,384 கிராம் தங்கமும் என மொத்தம் ஆயிரத்து 383 ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ. 5.4 கோடி மதிப்பிலான நிதியுதவியும், ரூ.5.4 கோடி மதிப்பிலான தங்கமும் வழங்கப்படுகிறது. எனவே,பொதுமக்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்துகொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி, வாழ்வில் வளம் பெறவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தமீம்முனிசா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.