Rs 25 lakh set for Khadar sales center for Diwali special sale Perambalur Collector Santha Information
காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று, பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்படும். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கலெக்டர் வே.சாந்தா, மற்றும் எம்.எல்.ஏ இளம்பை ரா.தமிழ்ச்செல்வன், ஆகியோர் அருகில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் விற்பனை நிலையத்தின் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.20 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.7.5 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிற்கு ரூ.25 லட்சம் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கதர்விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், கதர் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற பணியாளர்களுக்கும் கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்,ஓ ராஜேந்திரன், தாசில்தார் பாரதிவளவன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன், மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.