RSS Rally in Perambalur: Peaceful with heavy police security; More people attended this year than in previous years!

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த ஆண்டு மற்றும் 75வது சுதந்திர தின நிறைவு விழா நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த காந்தி பிறந்த நாளன்று, ஊர்வலம் நடத்த திட்டமிட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு மறுத்ததை தொடர்ந்து, பல கட்ட நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதில், அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். வழங்கப்பட்ட நேரத்தில் பேரணி, கூட்டத்தை நடத்தி முடித்துக் கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்கு தொடங்கி – 6 மணிக்குள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்தையும் முடிக்க வேண்டும். பேரணியில் லத்தி, ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது.

குழாய் வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தாமல், பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். பேரணி போகும் வழியிலும், வண்டியிலும் பேனர்கள், பலகைகள் இருக்கக் கூடாது. மத ரீதியான வாசகங்கள், சுலோகங்களை ஊர்வலம், கூட்டத்தில் வாய் மொழியாகவோ அல்லது பதாகைகளிலோ பயன்படுத்தக் கூடாது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

பெரம்பலுார் பாலக்கரை அருகில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை திருவிநாயக வேல்முருக சித்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ரோவர் ஆர்ச், சங்குபேட்டை , காமராஜர் வளைவு, கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் பொதுக்கூட்ட மேடை வந்து முடிந்தது.

வழிகளில், தொண்டர்களுக்கு பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும், ஊர்வலத்தில் வந்து பாரதமாதா அலங்கார ஊர்த்திக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு அணிவகுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கு வானொலி திடலில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாரத் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். விக்டரி லயன்ஸ்கிளப் முன்னாள் தலைவர் குணசீலன், நகர தலைவர் வக்கீல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சித்தர் விநாயக வேல்முருகன் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கோட்ட தலைவர் கிருஷ்ணமுத்துசாமி கலந்துகொண்டு பேசுகையில், ஆர்எஸ்எஸ் துவக்கம், அதன் பணிகள், சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பாஜக மாநில இணை பொருளாளர் மற்றும் ராமக்கிருஷ்ணணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சாமி. இளங்கோவன், சுபிக்‌ஷா சாமிநாதன், ராமகிருஷ்ணா கல்விநிறுவன செயலாளர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் பெரம்பலுார் மாவட்ட பொருளாளர் கார்த்திக்கேசவன் நன்றி கூறினார்.

பெரம்பலூரில் ஆர்எஸ்எஸ்- சின் அணிவகுப்பு ஊர்வலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களை, அதிகளவு புதிய தொண்டர் இதில் கலந்துகொண்டனர். பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்து வருகிறது என்பது இதன் தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்காக திருச்சி ஐ.ஜி சந்தோஷ்குமார், டிஐஜி சரவணசுந்தர், பெரம்பலுார் எஸ்பி மணி மேற்பார்வையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!