RT Ramachandiran MLA inaugurated the Government of Tamil Nadu by providing free Dhoti sarees to construction workers in Perambalur.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில், பெரம்பலூரில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆர்.டி. இராமச்சந்திரன் எம்.எல்.ஏ கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 15,700 தொழிலாளர்களுக்கு பச்சை அரிசி 2கிலோ, பருப்பு 1கிலோ, சமையல் எண்ணெய் 500கிராம், நெய் 100கிராம், வெல்லம் 1கிலோ, ஏலக்காய் 5 கிராம், முந்திரிப் பருப்பு 25கிராம் மற்றும் உலர் திராட்சை 25கிராம் ஆக எட்டு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஒவ்வொரு பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தில், ஆண்கள் 3,634 பெண்கள் 7,114 என மொத்தம் 10,748 நபர்களுக்கும், குன்னம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மையத்தில் ஆண்கள் 1,540 பெண்கள் 3,412 என மொத்தம் 4,952 நபர்களுக்கும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது.
இந்நகிழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர்கள் ஜெ.எ.முஹம்மது யூசுப், மு.பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!