Ruling party minister, MLA supports the protest of tollgate workers demanding Job!

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் பணி நீக்கம் செய்த 56 தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவங்கர்- எம்.எல்.ஏ பிரபாகரன்- திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் தொழிலாளர்கள் நடத்தி வரும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்!

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி, கடலூர் மாவட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளையும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், ஒன்றிய தரைவழிப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியின் உறவினர் ஒருவர் வாங்கியுள்ளார். அதில் இருந்தே நிர்வாகத்திற்கும்,பணி புரியும் தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை துவங்கி விட்டது.

தொழிலாளர்களை குறி வைத்து நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் சுமார் 56 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளது நிர்வாகம். நிர்வாகத்தைக்கண்டித்து தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக, இன்றைக்கு 3 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறப்போரராட்டத்தில் ஈடுட்டுள்ள தொழிலாளர்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொழிலாளர்களோடு தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 13- ஆண்டுகளாக இங்கு பணி புரிந்து வந்த 56 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்த அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. நான் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தமிழக எம்.பி.க்கள் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் இந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!