Rural Librarian Association grant demonstrated periodic remuneration
தமிழகத்தில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட நூலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட அரசு அலுவலர் சங்க செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சாந்தி முன்னிலை வகித்தார். சங்க மாநில துணைத்தலைவர் பத்மநாபன், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் நவலடி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்கள். திரளான நூலகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
இதே போன்று பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.