Sale of 5 kg gas cylinder to small, micro, traders in Perambalur: Collector started!
5 கிலோ எடையிலான தடையில்லா வணிக எரிவாயு உருளைகளை ரேசன் கடைகளில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையும், இந்தியன் ஆயில் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 5 கிலோ எடையிலான தடையில்லா வணிக கேஸ் சிலிண்டர்களை நியாயவிலை காடிகளில் விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படும் பெரம்பலூர் வட்டாரம், பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் துறைமங்கலம்-11 நியாயவிலைக்கடையில் 5 கிலோ எடையிலான கேஸ் சிலிண்டர்களை பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில், கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.
நடைபாதை வியாபாரிகள், சிறுவணிகர்கள், இடம் பெயரும் தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் காண்பித்து நியாயவிலைக்கடைகளில் லிண்டரை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் 5 கிலோ எரிவாயு உருளையினை ரூ.1520.50/ செலுத்தி நியாயவிலை அங்காடிகளில் பெற்றுக் கொள்ளலாம். காலியான 5 கிலோ எரிவாயு உருளையினை நியாயவிலை அங்காடியில் ஒப்படைத்து ரூ.576.50/ செலுத்தி மீண்டும் நிரப்பட்ட உருளையினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
துணை பதிவாளர் கே.கே. செல்வராஜ், பெரம்பலூர் நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், வக்கீல் ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள், பழனிசாமி, ஜெயபிரியா, ஷாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அதிமுக கவுன்சிலர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து, கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தனக்கு உரிய அழைப்பு விடுக்கப்படாதை கண்டித்து நியாயம் கேட்தோடு, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.