Separation of polling booths with more than a thousand voters in Perambalur district

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையங்களை கூடுதலாக ஏற்படுத்துதல், இடம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் தெரிவித்தாவது: இந்திய தேர;தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 123 வாக்குசாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 88 வாக்குச்சாவடி மையங்கள் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் (தனி) தொகுதியில் 21 வாக்குசாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 8 வாக்குச்சாவடி மைய கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாலும், கூடுதல் வாக்குசாவடி அமைக்க போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கபட்டுள்ளது. பள்ளி கட்டிடத்தின் பெயர் திருத்தத்தின் காரணமாக, பெரம்பலூர் (தனி) தொகுதியில் 1 வாக்குசாவடி மையமும் மற்றும் குன்னம் தொகுதியில் 4 வாக்குசாவடி மையங்களின் பெயர்கள் மாற்றியமைத்து, அரசியல் கட்சிகளின் ஒப்புதல் பெறப்பட்டது.

பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 455 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்களும் ஆக மொத்தம் 863 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது என தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் நீக்கம் செய்ய பொது மக்களுக்கு உதவி செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கபட்டுள்ள வாக்குசாவடி மையங்களுகென தனியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து கொள்ள அரசியல் கட்சியினரிடமும் கூட்டத்தில் தெரிவிக்கபட்டது.

இந்த கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!