Sexual harassment of female students in Perambalur sports hostel: Mathar Sangam petition to take action!
பெரம்பலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பியிடம் இந்திய மாதர் சங்கத்தினர் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விடுதியில் தங்கி பயிற்சி செய்து படிக்கும் மாணவிகளிடம் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜ் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தும், அவர் மாணவிகளிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். இந்த பாலியல் சம்பந்தமாக புகாராக கடந்த ஜூன் மாதம் புகார் அளிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மேலும் இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விடுதி மாணவிகள் நீதிபதிகளிடம் புகார் மனுவை அளித்தனர். பின்னர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நன்னடத்தை அலுவலர் அலுவலரிடமும் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் தொடர்பாக தகவல் அறிந்த, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நன்னடத்தை அலுவலர் . கோபிநாத் அங்கு விசாரணை மேற்கொண்டு ஆய்வு நடத்தினர்.
இதில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தர்மராஜ் விளையாட்டு விடுதி மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆனால் இதனால் வரை அவர் மீது எந்த ஒரு துறை ரீதியான நடவடிக்கையும் காவல்துறையினர் நடவடிக்கையும் இல்லை என்பதால், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் அவர் மீது சிபிஐ விசாரணை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் இது குறித்து மனு அளித்தனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த சுரேஷ் அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பயிற்சியாளர் தர்மராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.