Sharpness of the sword, but by the gumption of this world is easy victory – A. kaliyamurtti

பெரம்பலூர் மாவட்டத்தில் நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா – 2017 ன் ஐந்தாம் நாள் நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படிப்பும், பணமும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி, பேசியதாவது:

சமூக அக்கறையுடன் நடத்தப்படும் இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் ஆறாவது ஆண்டாக பெரம்பலூரில் தொடர்ந்து நடைபெற்று வருவது பெருமைக்குரிய விஷயமாகும். ஒருவனுக்கு கிடைக்கும் கல்வி அறிவு என்பது பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சிறப்புகளையும், செல்வங்களையும் வழங்கும் வல்லமை உடையது. எனவே இங்கு வருகை புரிந்துள்ள ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நூலின் பெருமைகள் குறித்தும், கல்வி அறிவின் அவசியம் குறித்தும், தங்களிடம் பயிலும் மாணவ மாணவிகளிடம் எடுத்துக்கூறவேண்டும். நீங்கள் தலை குனிந்து புத்தகங்களை படிக்கும் திறனை வளரத்துக்கொண்டால் எதிர்காலத்தில் சமுதாயமே உங்களை தலைநிமிர்ந்து பார;க்கும் அளவிற்கு உங்களை உயர;த்துபவை புத்தகங்களே.
வாளின் கூர்மையால் இந்த உலகை ஆள்வதைவிட நூலின் மூலம் கிடைக்கும் அறிவுக் கூர்மையால் இந்த உலகை எளிதாக வென்றிடலாம். எனவே இந்த சமூகம் மேம்பாடு அடையவேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் மூலமாக தலைசிறந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் “மாதவிடாய்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார் மேலும், அவர் இயக்கிய “மாதவிடாய்” எனும் தலைப்பிலான ஆவணப்படம் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்த வாசகர்கள் மத்தியில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இயக்குநர், கனவு ஆசிரியர் தாமரைக் கண்ணன் புத்தகத்திற்குள் ஒரு மயிலிறகு எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். நேற்றைய புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளை பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து நிகழ்ச்சியை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுகுமாறன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!