Short term skill development trainings for SC, ST students through Perambalur District TAHDCO

பெரம்பலூர் கலெக்டர் (பொ) திரு.சி.ராஜேந்திரன் விடுத்து செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ – மாணவியர்களுக்கு குறுகிய கால (3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

2020-2021 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் அளிக்கப்படவுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று பயிறசியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் பயிற்சி பெற சென்று வருவதற்கான பயணப்படி, போக்குவரத்து செலவு மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இயந்திர ஆபரேட்டர் பயிற்சிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திய நல கல்வி அறக்கட்டளையிலும், பாடலூர் அமிர்தா அறக்கட்டளையின் மூலம் செட்டிகுளத்திலும், இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் கட்டர் நல்ல- ஆடைகள்என்ற பயிற்சிக்கு வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அபெக்ஸ் குளோபல் சொல்யூஷன்ஸ் மூலமும், கரிம விவசாயி மற்றும் ஜுனியர் மென்பொருள் உருவாக்குநர் என்ற பயிற்சிக்கு வேப்பூர் போகஸ் எடுகேஷனல் அறக்கட்டளையின் மூலம் வழங்கப்படுகிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற பயிற்சிக்கு ஏதுவாக தொழில் தொடங்கிட, இணையதளத்தின் வாயிலாக தாட்கோ, மாவட்ட மேலாளரிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!