Speaking earns money; women fall like moths to a flame; social activists urge the central and state governments to ban apps that corrupt society!

Thanks to.. Photograph: Alexander Medvedev/Getty Images/iStockphoto

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும், பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை எல்லாம் பாயும் முதுமொழி.

நாட்டில் குணத்திற்கான முக்கியத்துவத்தை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தேர்தல்கள் ஆனாலும் சரி, தேர் திருவிழாவானாலும் சரி. வல்லான் வகுத்ததே வாய்க்கால். நாட்டில் பணம் வைத்திருப்பவர்கள் வைத்ததே சட்டம். உன் விலை என்ன? என்றாகி வரும் வேளையில், இளைஞிகள், குடும்ப பெண்கள் உள்ளிட்வர்களை குறித்து சில Appகள் தற்போது பணம் பார்க்கும் வேலையில் ஸ்டார்ட்-அப் கம்பனி என்ற பெயரில் இறங்கி உள்ளது. இதில், பேசும் பெண்களுக்கு கட்டணமின்றி இலவச அனுமதியும், விரும்பும் பெண்களிடம் பேச ரூ. 1 என ஆரம்பித்து ரூ.9 என தொடங்கி ரூ. 364 வரை கட்டண ப்ளான்கள் நீள்கின்றன.

அதில், அனைத்து மொழிவாரிகயாக பெண்கள் இதில் இணைந்துள்ளதால், விரும்பிய லோகேசனில், விரும்புவர்களுடன் வாய்ஸ் காலில் பேச ஒரு கட்டணமும், வீடியோ காலில் பேசினால் அதிக அளவு கட்டணமும், வழங்குவதாக கூறப்படுகிறது. மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பெண்கள் பேசியே சம்பதிப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த App சமூக சீர்கேடுகளுக்கு அடித்தளமாக அமைவதுடன் சமூக விரோதிகளுக்கு சாதகமாகிவிடுகிறது. பல பெண்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக கணவருக்கு தெரியாமல் இந்த நண்பர்கள் App-ல் இணைந்து எல்லை மீறும் சம்பவங்களும் கணவர்களுக்கு தெரியவந்ததால் பல பெண்கள் வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு தவறான பாதைக்கும் வித்திடுகிறது. சமூக ஊடகங்களால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில் தற்போது பேசினால் பணம் கிடைக்கிறது என்பதால் பல பெண்கள் வேலையை விட்டுவிட்டு கணவருக்கு தெரிந்தும், தெரியாமலும் இந்த ஆப்பில் இணைந்து பணம் பண்ணுவதை பார்த்து குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன. பல ஆண்களும் பெண்களின் பெயரில் Fake ID வைத்து கொண்டு பேசுவது தற்போது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தையும், குடும்ப உறவுகளை சீரழிக்கும் இந்த ஆப்புகளை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!