Special Krishna Jayanthi Gift Pack on Aswins Home Special
அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் விடுத்துள்ள தகவல்:
நாளை ( செப்.2) கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு கிருஷ்ண ஜெயந்தி கிப்ட் பேக் விற்பனைக்கு வந்துள்ளது.
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் பெரம்பலூர், திருச்சி, ஆத்தூர், நாமக்கல், சென்னை, கரூர் ஆகிய இடங்களில் ஸ்வீட் அன்ட் பேக்கரி மற்றும் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தியை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி கிப்ட் பேக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் இளம் வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால் அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்பார்கள். கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளுமுறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றைவைகளை வைத்து படைத்து வழிப்படுவது வழக்கம்.
இதற்காக அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில் இனிப்புசீடை, மனவலம், சீடை, தட்டை, வெண்ணெய், அதிர்சம், கடலை உருண்டை, தேன்குழல் முறுக்கு, பொட்டுக்கடலை உருண்டை ஆகியவை அடங்கிய கிப்ட் பேக் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளிவந்துள்ளது.
இந்த அஸ்வின்ஸ் கிப்ட் பேக்கை வாங்கி கிருஷ்ணருக்கு படைத்து பொதுமக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம் என அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.