Sports competitions for health officials to mark centenary: Perambalur Collector launches!

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ஆரம்பித்து 100 வது ஆண்டை எட்டியுள்ளதை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

சுகாதார துறையின் 100வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்த துறை சார்ந்த மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள், ஆய்வக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோ-கோ, கிரிக்கெட், கபடி, பூப்பந்து. எரி பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஒரு வட்டத்திற்கு தலா 50 நபர்கள் வீதம் 4 வட்டத்திற்கும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை அன்று ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கோலப்போட்டி, சிறு சிறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் அனைத்தும் அந்தந்த வட்டார மருத்துவ வளாகத்தில் நடைபெற உள்ளது. வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு 28.10.2022 அன்று நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பரிசுகளை வழங்குவார்கள்.

சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், உதவி திட்ட மேலாளர் கலைமணி, நேர்முக உதவியாளர் இளங்கோ, சுகாதார பயிற்றுநர் செல்லபாண்டி, வட்டார மருத்துவ அலுவலர்கள் பிரேம்குமார்(வேப்பந்தட்டை), மகாலட்சுமி(ஆலத்தூர்), சேசு(வேப்பூர்), சூர்யகுமார் (பெரம்பலூர்), வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜமோகன் (பெரம்பலூர்), ராஜேந்திரன்(ஆலத்தூர்), தர்மலிங்கம் (வேப்பந்தட்டை), தாசன் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!