State Power Ministers’ Group meeting in New Delhi; Minister Sivasankar urges special financial allocation under the 16th Finance Commission!

புதுடெல்லியில் நடைபெற்ற மின் பகிர்மான நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மை குறித்த மாநில மின்துறை அமைச்சர்களின் குழு (Group of Ministers) கூட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

இந்திய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் வால் மற்றும் இந்திய அரசின் மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் பெஸ்ஸோ நாயக் ஆகியோர் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ரலம் சர்மா மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன் உடன் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அமைச்சர் சிவசங்கர் உரையாற்றியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு எரிசக்தித் துறையில் முன்னோடியாக பல முக்கிய சாதனைகளையும் சீர்திருத்த முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும், நாடு முழுவதும் நுகர்வோர் விலை குறியீட்டிற்கு (Consumer Price Index) இனையாக ஆண்டுதோறும் தானாக அதிகரிக்கும் பல ஆண்டுகளுக்கான Regime) தமிழ்நாட்டில் கட்டண அமைப்பு (Multi-Year Tarift அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது மின் உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் பகிர்மான நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 18.73 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பு (AT&C) 2024-25 ஆம் ஆண்டில் 10.73 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தி மின் தேவைகள் மற்றும்
கெள்முதல் திட்டமிடப்படுகின்றன. REC மற்றும் PFC நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டதுடன், ACS-ARR இடைவெளி தற்போது யூனிட் ஒன்றுக்கு வெறும் ₹004 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகை வழங்கும் நாட்களும் 146 நாட்களில் இருந்து 49 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி தொடரமைப்பு மற்றும் பகிர்மானத்திற்காக ரூ.200.000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடு தேவைப்படுவதாகவும். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் புதிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், 16வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், REC மற்றும் PFC நிறுவனங்களின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 1.5 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் எனவும். சூரிய மேற்கூரை மின்சக்திக்கா Net Metering முறையை Net Food In முறையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். திறந்தவெளி நுகர்வோர்களுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) மின்ச சேமிப்பு (Banking) கட்டணங்கள். மின் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும். சரிசெய்யப்படும் நேரத்திற்கும் இடையேயான மின் கொள்முதல் செலவு வித்தியாசத்தை பிரதிபலிக்க வேண்டும் அல்லது, அந்தந்த நேர இடைவெளியில் சரிசெய்தல் அனுமதிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான விலக்கு, GNA அடிப்படையிலான கட்ட பகிர்வு பை ஹைட்ரஜன் திட்டங்கள் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டுக்கு மிகுதியான ISTS கட்டணச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள User Pays கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாக நிலைத்த RE தொழில்நுட்பங்களுக்கு விலக்கு வழங்கக்கூடாது என்றும் Chogsh, Raigarh-Pugalur-Trissur HVDC முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கட்ட நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதேபோல், SECI நிறுவனத்தின் வணிக வருவாய் விகிதம் (Trade Margin) குறைக்கப்பட வேண்டும். மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் Captive Generation Scrutiny செயல்முறையை உடனடியாக அறிவிக்க வேண்டும் மின்சாரக் கட்டணக்

கடன்கள் IBC தீர்வு முறையில் முன்னுரிமை பெற வேண்டும். RBL கடன் காலத்தை சொத்து ஆயுள் (Asset Life) உடன் பொருந்துமாறு நீட்டிக்க அனுமதிக்க வேண்டும். ECB வரம்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை உயர்த்தப்பட வேண்டும். தொடரமைப்பு சொத்து பணமயமாக்கலில் (Transmission Asset Monets) மூலத ஆதாய வரி விலக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மின்சார பகிர்மான நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வலுவான தளமாக இக்குழு அமைந்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு நடைமுறை சீர்திருத்தங்கள், நிதிசார் தெளிவு மற்றும் முதலீட்டு தயார்நிலையை மையப்படுத்தி தொடர்ந்து பங்களித்து வருவதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொண்டு, மாநிலத்தின் எரிசக்தி வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் முக்கிய அம்சங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, மத்திய மின் துறை இணை அமைச்சர் பங்கேற்றுள்ள பிற மாநில மின்துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஏற்கத்தக்க, நம்பகமான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் மின் பகிர்மானக் கழகங்களின் நிலைத்தன்மை, முதலீட்டுக்கான தயார்நிலை ஆகியவற்றின் புதிய சகாப்தத்தை கூட்டாக உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம் என்றும், தமிழ்நாட்டின் எரிசக்தித துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!