Street plays to raise awareness for people with disabilities

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் படும் நலத்திட்டங்கள் குறித்தும், தேசிய அறக்கட்டளையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு தெருமுனை நாடகங்கள் நடத்தப்படவுள்ளது.

அதன் படி 28.2.2017 அன்று வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லப்பைகுடிகாடு பேருந்து நிலையம், குன்னம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும், 1.3.2017 அன்று வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம் பகுதிகளிலும், 2.3.2017 அன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பலூர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலும், 3.3.2017 அன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், இரூர் ஆகிய பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை விழிப்புணர்வு தெருமுனை நாடகங்கள் நடத்தப்படவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தேசிய அறக்கட்டளையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் அறிந்துகொண்டு அரசின் திட்டங்கள் மூலம் பயனடைய இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!