Student Anita for justice to death, protested at the Perambalur TNEB Staff association (citu)

பெரம்பலூர் : அரியலூர் மாவட்டம் செந்தூறை குழுமூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்களை பெற்றிருந்தார். அனிதாவுக்கு மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்தது.

மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய மாநில அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையொட்டி பெரம்பலூரில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்டக்கிளை சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்ட தலைவர் கே.கண்ணன் தலைமை வகித்தார். எ.சார்லஸ், எ.அமுதா, எஸ்.நல்லுசாமி, டி.ஆறுமுகம், சி.இராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், பொருளாளர் வி.தமிழ்செல்வன், ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு எ.கணேசன், முத்துசாமி, கோட்ட செயலாளர் ஆர்.இராஜகுமாரன், எம்.பன்னீர்செல்வம், எம்.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். கோட்டத் தலைவர் பி.நாராயனன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!