Subsidized Livestock Insurance Scheme: Perambalur Collector Info!

கால்நடை காப்பீடு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை மானியத்துடன் காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவீதம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும்.

இதர வகுப்பினர்களுக்கு 50 சதவீம் மானியத்தில் காப்பீடு செய்யப்படும். உதாரணமாக ரூ.35,000/- மதிப்பில் பசு/ எருமைகளுக்கு ஒரு வருடத்திற்கு காப்பீடு செய்திட தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ரூ.152/- மற்றும் இதர வகுப்பினருக்கு ரூ.254/- மட்டும் செலுத்தினால் மீதமுள்ள தொகையினை அரசு மானியமாக ஏற்றுக்கொள்ளும், அதிகபட்சமாக ஒரு குடும்பத்துக்கு, ஐந்து பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை காப்பீடு செய்ய 800 இலக்கு நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இரண்டரை முதல் எட்டு வயது உடைய பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளர்ப்போர் தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!