Tamil boycott at 75th Indian Independence Day celebrations: Rs 8.64 crore loan on behalf of banks; Presented by Perambalur Collector.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 75-வது இந்திய சுதந்திர தின அமுதபெருவிழாவினை முன்னிட்டு வங்கி கூட்டமைப்புகளின் சார்பாக ரூ.8.64 கோடி மதிப்பில் கடன் உதவிகளை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட சேர்மன் ராஜேந்திரன் முன்னிலையில் கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்கள்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் மூலம் 148 பயனாளிகளுக்கு ரூ.8.64 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு விவசாய உள்கட்டமைப்பு கடன், விவசாய துணை நடவடிக்கைகளுக்காக கடன், குறு.சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன், கல்வி கடன், வாகன கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு முத்ரா கடன், வீட்டு கடன் போன்ற பல்வேறு கடன்களில் 2020-21ஆம் நிதியாண்டிற்கு ரூ.4,010 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.3,170 கோடி கடன் வழங்கப்பட்டது. 2021-22ஆம் நிதியாண்டிற்கு ரூ.4,120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.3,638 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டிற்கு ரூ.4,267 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2021-22 ஆம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய 4 வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.சி.ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட இயக்குநர் ராஜ்மோகன், வேப்பந்தட்டை யூனியன் சேர்மக் ராமலிங்கம், பெரம்பலூர் துணை சேர்மன் சாந்தாதேவி, முன்னோடி வங்கி உதவி பொது மேலாளர்(தஞ்சாவூர்), கோடிஸ்வரராவ், முன்னோடி வங்கி மேலாளர், (பெரம்பலூர்) பரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த நிகழச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தமிழில் அச்சிடாமல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்து. தண்டவாளத்தில் தலையை வைத்து தமிழ் வளர்த்த தலைவர் கலைஞர் தலைமையை மற்றும் கொள்கையாக கொண்ட ஆட்சியில் தமிழ் புறக்கணிப்பட்டு வருகிறது.