Tamil Nadu Chief Minister M. K. Stalin’s visit to Perambalur & Ariyalur districts on November 5th! Collectors consult with officials!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா, அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி இருவரின் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நடைபெற்றது.

அப்போது பெரம்பலூர், அரியலூர் கலெக்டர்கள் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி 05.11.2022 அன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கும் சேர்த்து அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெறவுள்ளது.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் அடிக்கல் நாட்ட வேண்டிய பணிகள் குறித்த தகவல்களை அந்தந்த துறை அலுவலர்கள் 2 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பயனாளிகளை விழா இடத்திற்கு அழைத்து வருவதற்கு, திரும்ப அவர்களின் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு விடுவதற்கும் தொடர்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

பயனாளிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுக்கான அடையாள அட்டைகள், வாகன அடையாள அட்டை, உள்ளிட்ட பணிகளை இரண்டு மாவட்டங்களின் நேர்முக உதவியாளர்கள் (பொது) மேற்கொள்ள வேண்டும். விழாவிற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் காவல்துறை மூலம் முறையாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையின் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்புத்துறை வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான அனைத்து பணிகளும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலமைச்சர் நமது மாவட்டங்களுக்கு வருகை தந்து சிறப்பிக்க இவ்விழாவினை சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களும் தங்களது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என பேசினர். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி மணி, மாவட்ட உள்ளிட்ட அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!