Tamil Nadu Farmers Association Conference Resolution Passed to set up agricultural college in Veppanthattai!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், வேப்பந்தட்டை வட்ட மாநாடு மாவட்ட துணைத் தலைவர் சி.கோவிந்தன் தலைமையில் நடந்தது. வட்டத் தலைவர் ஆர்.சாமிதுரை, செயலாளர் பி.ராமச்சந்திரன், துணைத் தலைவர் எ.செங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பி.சின்னசாமி, விவசாயிகள் கூட்டமைப்பு ஆரோக்கியசாமி மகளிர் அணி எஸ்.கார்த்திகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில், பச்சைமலை கல்லாறு, சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்நடை பராமரிப்பிற்கு மானிய விலையில் தீவனம் வழங்கி பால் உற்பத்தியாளர்களுக்கு பால் மாட்டு கடன் வழங்க வேண்டும், வெள்ளுவாடி பள்ளி குழந்தைகள் உரிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதால், உடனே பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், தோட்டக்கலை மின் இணைப்புகளை இலவச மின்சாரமாக மாற்றித் தர வேண்டும், மதிப்புகூட்டு பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் கடன் உதவிகள் வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், மாடுகளுக்கு கோமாரி மற்றும் அம்மை நோய் தடுப்பூசிகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. நிர்வாகி சி.சண்முகம் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!