Tamil Nadu team selects for National Disabled Kabaddi competition in Perambalur!
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபாடிப்போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மே மாதம் நடக்கிறது. தேசியபோட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமாரி தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட தடகளப்பயிற்றுனர் கோகிலா முன்னிலை வகித்தார். பாராஒலிம்பிக் விளையாட்டுக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பயிற்றுனருமான கலைச்செல்வன், தமிழ்நாடு கபாடி அணியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்தார்.