Tamil New Year confuses people; Request to Chief Minister MK Stalin to remove the names of 60 years in Tamil!
மக்களை குழப்புவதில், தமிழ் புத்தாண்டு ஒன்றாகவும் மாறி விட்டது. ஆட்சி மாற்றத்தின் போது, ஒரு கட்சி தை 1 ஒன்றும், மற்றொரு கட்சி சித்திரை 1 என்றும், அறிவிக்கிறது. ஆனால், காலாண்டரில் தமிழ் புத்தாண்டு இன்றும் என அச்சிடப்பட்டுள்ளது.
இதில், தற்போதைய திமுக அரசு ஒரு தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டில், நாள்காட்டியில் தமிழ் ஆண்டு எந்த நாள் என்று அச்சிட்டு உறுதி செய்ய வேண்டும். மேலும், பல்வேறு அர்த்தங்கள் கூறினாலும், ஏற்க கூடிய ஒன்றை உறுதிப்படுத்துவதோடு, சமஸ்கிருத ஆண்டுகளாகவும், தொடர்ச்சி இல்லாமல் 60 ஆண்டுகளாக முடிவுறும் இந்த,
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோத்பத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, பகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய,
ஸர்வஜித்து, ஸர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி விசுவாவசு, பராபவ,
பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்திரி, ரௌத்த்ரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி, குரோதன, அக்ஷய
என்ற பெயர்களை நீக்கி வரும் ஆண்டின் நாள்காட்டியில் தமிழ்ப் புத்தாண்டு எது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால், கல்வி பயிலும், சிறுவர்கள், தமிழை பயன்படுத்துவோர்கள், தேர்வு எழுவோர்கள் பெரும் குழப்பம் அடைக்கின்றனர்.
60 ஆண்டுகளை கொண்டது ஒரு நூற்றாண்டு எனில், தற்போது நடப்பது எத்தனையாவது நூற்றாண்டு என்பதையும், தமிழ் அறிஞர்களை கொண்டு ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்.
கேரளா, மேற்குவங்கம் போன்று, தொடர்ச்சி ஆண்டுக்கு மாற வேண்டும். அதோடு 1971 ல் அரசு அறிவித்த, திருவள்ளுவர் ஆண்டை தொடர்ச்சி ஆண்டாக நாள் காட்டியில் அச்சிட செய்யலாம். எனவே, தமிழ் அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்மொழியை செம்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ் சமூக ஆர்வர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்லாமிலும், நேபாள், பர்மா, மலேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் தமிழ் புத்தாண்டு இன்றே அங்கும் கொண்டாப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், புறா வழியாக கடித தொடர்பு ஏற்படுத்தி இருந்த மனித சமூகம், தற்போது மின்னஞ்சலையும் தாண்டி பயணித்து கொண்டிருக்கிறது. மாற்றம் தேவை என்பதை அனைவரும் உணரவேண்டிய காலமிது..!