The collector gave a bouquet of flowers to the TADCO chief who came to Perambalur district survey work this morning! MLA Prabhakaran was present.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, தாழ்த்தப்பட்டோர்,இருளர்கள், மலைவாழ் மக்கள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் ஆகியோர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் வாழ்க்கை மேன்மையடைய செய்யும் வகையில், நிலம் வாங்குவதற்கும், நிலங்களை சமன் செய்து, சீர் செய்வதற்கும், வீடுகள் கட்டுவதற்கும் அரசு நிதியுதவி மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவது குறித்தும், தாட்கோ மூலம் சமுதாய கூடங்கள், ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டுவது குறித்தும்,தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும், அரசு திட்டங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர்(தாட்கோ), உ.மதிவாணன், பெரம்பலூர் கலெக்டர் வெங்கட்பிரியா-விடம் ஆலோசனை நடத்தினார்.

பெரம்பலூர்எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள்  வீ. ஜெகதீசன், சோமு.மதியழகன்  ஒன்றிய பொறுப்பாளர்  ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், வேப்பந்தட்டை, லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகள் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!