The college student’s death was drowned in the well near Perambalur
பெரம்பலூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் முழ்கி உயிரிழந்தது சக மாணவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் செல்வகுரு(20), இவர் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி அருகே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள செல்வகுரு, இன்று பெரம்பலூரில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டு நண்பர்கள் சிலருடன் (நவீன்குமார், பிரபு, பிரேம்குமார்) கல்லூரி வளாகத்திற்கு எதிரே வயல் பகுதியிலுள்ள மனோகரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
கிணற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த செல்வகுரு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்றதும், நீரில் முழ்கி உயிரிழந்ததார். தண்ணீரில் முழ்கிய செல்வகுரு நீண்ட நேரமாகியும் வெளி«ய வராததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் பொது மக்கள் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் செல்வகுருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வை நீக்கிட வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் நீச்சல் தெரியாமல் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.