The farmer requested to the collector’s office with a blank plastic bottle for the drinking water supply
குடிநீர் வினியோகம் கோரி காலி பிளாஸ்டிக் பாட்டில் மாலையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் மனு
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலை கிரரமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் மூலம் சட்ட விரோதமாக இயக்கப்படும் அனைத்து இணைப்புகளையும் துண்டிக்க வேண்டுமென வலியுறுத்தியு இன்று அதே ஊரைச் சேர்ந்த ரவி என்கின்ற விவசாயி காலி வாட்டர் கேன்களை சணலில் இணைத்து கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
ரவியிடமிருந்து மனுவை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
முறையாக விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி வாட்டர் பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு, விவசாயி ஒருவர் மனு அளிக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.