The Government of Tamil Nadu has provided Rs. 1 lakh 16 thousand relief for the damage caused by the Nivar storm in the Perambalur district.

தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், நிவர் புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கும், கால்நடைகளின் உயிரிழப்பிற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 300 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வெங்கடப்பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


நிவர் புயல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவி திட்டத்தின் கீழ் காற்று மற்றும் மழையின் காரணமாக சேதமடைந்த வீடுகளை செப்பணிடவும், சீரமைக்கவும், மறுவேலை செய்திடவும் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பிற்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெருமத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன், சிலம்பாயி, செல்லையா, பாப்பா, கீழப்புலியூரைச் சேர்ந்த ஜோதி, துங்கபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ், வளர்மதி, பரவாயைச் சேர்ந்த பவுன், வசிஸ்டபுரத்ததைச் முத்துச்சாமி, வடக்கலூரைச் சேர்ந்த சின்னசாமி, ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த முத்துலெட்சுமி, புஜங்கராயநல்லூரைச் சேர்ந்த கெங்கையம்மாள், அரும்பாவூர் பேரூராட்சியை சேர்ந்த பழனியான்டி உட்பட மொத்தம் 13 நபர்களின் கூரைவீடுகள் பகுதி சேதமைடைந்துள்ளது.

மேலும் பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த பெரியசமி என்பவரின் 2 மாடுகள் மின்சாரம் தாக்கியும் , குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூரைச் சேர்ந்த சேப்பெருமாள் என்பவரின் ஆடு சுவர் இடிந்து விழுந்ததினாலும் இறந்துள்ளது.

தமிழக அரசின் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவி திட்டத்தின் கீழ் பகுதி சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு ஒரு வீட்டிற்கு தலா ரூ.4,100 வீதம் 13 வீட்டிற்கும் ரூ.53,300ம், உயிரிழந்த கால்நடைகளின் உரியையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் இரண்டு மாடுகளுக்கு ரூ.60,000மும், ஒரு ஆட்டிற்கு ரூ.3,000மும் என மொத்தம் ரூ.1,16,300 அவரவர் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!