The micro-level people’s court, conducted by the Perambalur District Legal Services Commission, awarded Rs. Settlement of 30 cases worth Rs 83.8 lakh
உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மைக்ரோ லெவல் மக்கள் நீதிமன்றம், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். சுபாதேவி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நிரந்தரமக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட ஜி. கருணாநிதி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஏ. தனசேகரன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி எம். வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தின், அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி சார்ந்த பண பரிவர்த்தனை வழக்குகள், சொத்து சம்மந்தமான சிவில் வழக்குகள் மற்றும் சிறு அளவிலான குற்றவியல் வழக்குகள் என ரூ. 83 லட்சத்து 80 ஆயிரத்து 654 மதிப்பில் 30 வழக்குகளுக்கு சமரசமாக பேசி தீர்வு காணப்பட்டது. வழக்கறிஞர்கள், வழக்காடிகள், வங்கி மற்றும் பல துறையை சேர்ந்த அலுவலக பிரதிநிதிக்ள கலந்து கொண்டனர். இதில் 81 பயனாளிகள் பயனடைந்தனர்.