The petition requesting to The Tamilnadu Cm, the suspension of the program, farmers as Chinna mutlu Dam
மலையாளப்பட்டி விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லுவில் அணைக்கட்டும் திட்டம் தொடர்பாக 1969,1990 மற்றும் 2003 ம் ஆண்டுகளில் ஆய்வுப் பணி நடைபெற்றது. அப்போது அணைக்கட்ட மண் வளம் இல்லை எனக்கூறி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் அணைக்கட்டுவதற்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல் படுத்துவதினால் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே அணைக்கட்டும் திட்டத்தை கைவிட்டு அந்த பகுதிகளில் சின்ன சின்ன தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.