The students who won the competitions were congratulated by A.Raja MP!
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபடி, கோகோ., வாலிபால் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றன.
வாலிபால் போட்டி, பூப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சு.ஆடுதுறை அரசு மேல் நிலைப்பள்ளி அணி, பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி ஆகியவை மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணி வீரர்,வீராங்கனைகள் ஆ.இராசா.எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கீல் என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.