The sugar family card can be converted into a rice card; Perambalur Collector Information
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலினை இணைத்து டிச.20 வரை www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.