The thief who tried to escape in Perambalur jumped and got a head injury: admitted to the hospital!

பெரம்பலூர், எம்.எம் நகரை சேர்ந்த கணேசன் (43). இன்று அதிகாலை 3 மணிக்கு அவரது வீட்டில் சத்தம் கேட்டது, உடன் அவர் எழுந்து ஜன்னல் வழியாக பார்த்த போது, மர்ம ஒருவர் கேட்டு முன்பக்க கேட்டிக் பூட்டை உடைத்து, உள்ளே வந்து திருட முயற்சி செய்வது, தெரிய வந்தது. இது குறித்து போன் மூலம் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

மக்கள் திரண்டு வருவதை திருடன் தப்பிக்க முயன்று பக்கத்து மாடிக்கு தாவி தப்பி செல்ல முயன்றான். அப்போது தவறி விழுந்ததில், தலையில் அடிப்பட்டு, கிடந்தவனை பொதுமக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார், பொதுமக்கள் உதவியடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், திருடன் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மழவராயநல்லூரை சேர்ந்த சக்திவேல் (46) என்பதும் தெரிய வந்தது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!