Theft of goods including one lakh rupees from 4 shops near Perambalur: Attempt to rob the bank by disconnecting the CCTV!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் மெயின் ரோடு பகுதியில், தாலுகா அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும், ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல், மற்றும் முத்தூட் பைனான்ஸ் உட்பட நான்கு கடைகளில், நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து, உள்ளே சென்று ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியதோடு, அருகே உள்ள ஐஓபி வங்கியின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி இணைப்பை துண்டித்து விட்டு, வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வங்கியில் எச்சரிக்கை ஒலி எழுப்ப பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கவில்லை.

வங்கியில் பூட்டப்பட்டிருந்த 3 பூட்டுகளை மட்டும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் லாக்கர் உள்ள அறையை உடைத்து உள்ளே செல்ல முடியாததால் கொள்ளை சம்பவத்தை பாதியிலேயே கைவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக வங்கி லாக்கரில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்க பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பியது.

வேப்பந்தட்டை, பாலையூர், அன்னமங்கலம்! அரசலூர், எசனை, விசுவக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வங்கியில், கணக்கு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் வரவு செய்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி காவலாளி ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொள்ளையன் வங்கி ஏ.டி.எம். எந்திரம் என நினைத்து பாஸ்புக் அச்சிடும் எந்திரத்தை உடைத்து தகர்த்து தெரிந்தான். அதனால் ஏமாந்த கொள்ளையன் வங்கியை விட்டு வெளியேறியுள்ளான். கொள்ளை சம்பவம் அறிந்த மக்கள் கடைவீதியில் திரண்டு நின்று மோப்பநாய் ஓடி வருவதை அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு டி.எஸ்.பி ஜவஹர்லால், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவ பார்வையிட்டனர். பின்னர், மோப்ப நாய் தடயஅறிவியல் துறையினர் உதவியுடன் கொள்ளையனை அடையாளம் பணியினை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அது பாராமரிப்பு குறைவால் சேதமடைந்ததால் அங்கு காவலர்கள் தங்காமல், நெடுஞ்சாலை சுற்று வாகனத்திலேயே பணியாற்றுகின்றனர். மேலும், காவல் துறை போதிய காவலர்களை பணி நியமனம் செய்வதுடன், புறக்காவல் நிலையத்தையும் செப்பனிட்டு மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!