There is nothing wrong with adding Kamal Hassan to the Congress coalition in the Lok Sabha election; Kumari Anandan interview
மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பதில் தவறு இல்லை. என்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்குமரி ஆனந்தன்அளி்த்த பேட்டி:
பள்ளி, கல்லூரிகளி்ல் பயிற்று மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும். உலகப் பொதுமொழி ஒன்றை காண வேண்டும். உலகத்தில் 2 மொழிகள் மட்டுமே கட்டாய மொழியாக இருக்க வேண்டும். ஒன்று அவரவர் தாய் மொழி, மற்றொன்று உலகப் பொதுமொழி.மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணியில் சேர்ப்பதில் தவறு இல்லை.
ஜனநாயகத்தை காப்பதற்கும், மதவேறுபாடு இல்லாத ஆட்சியை அமைப்பதற்கும் உறுதுணையாக உள்ள கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றால் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம். கள், மது உள்ளிட்ட போதை பொருட்கள் ஒழிய வேண்டும். மது இல்லாத பாரதம் என்ற நிலை உருவாக வேண்டும். பாரத மாத கோயிலை தமிழக அரசு அமைக்க வேண்டும் என 41 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
இப்போது என் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கியள்ளது. பாரத மாத கோயில் கட்டுமான பணிகளை அரசு விரைவில் தொடங்க வேண்டும். மேலும் இந்த கோயிலை கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.
ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தப் பதவியி்ல், பொறுப்பில் இருந்தாலும், அப்படி நடக்கவில்லை என மக்கள் நம்புகின்ற வகையில் ஆதாரங்களோடு வெளியே சொன்னால், அவர்கள் இருக்கின்ற பதவியிலேயே தொடர்ந்து இருக்கலாம். ஆதாரங்களை காட்ட முடியவில்லையெனில் பதவியில் இருப்பது நியாயமில்லை என தெரிவித்தார்.