Thousands of fellow firefighters donate to the family of a soldier who died in a rescue operation near Perambalur
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி விவசாயி ஒருவரது கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவரும், பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரருமான ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு, 2006ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் 400 பேர் ஒன்றிணைந்து ரூபாய் 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அந்த நிதியை, பெரம்பலூர் தீயணைப்பு குடியிருப்பில் வசிக்கும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் மீட்பு படை வீரர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு, ராஜ்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
ஏற்கனவே தமிழக அரசும், தீயணைப்பு துறை சார்ந்த நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிற நிலையில், தங்களோடு பணியாற்றிய வீரரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி செய்யும் நோக்கத்தில் 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக தீயணைப்பு வீரர்கள் 400 பேர் ஒன்றிணைந்து ரூபாய் 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அந்த நிதியை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.