threatened to take video of the women issue in favor of, and against, a petition to the authorities in Perambalur
 
 
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குக்கு ஆதரவாகவும், எதிராகவும் பெரம்பலூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சில அமைப்புகள் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது.
 
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தலிடம், பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் நலச்சங்கம் சார்பில் அளித்த புகார் மனு விவரம் : 
 
கடந்த சில நாள்களாக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குரைஞர் ப. அருள் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு குறித்து அவதூறு தகவல் பரப்பி வருகிறார்.  சட்ட மன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், திட்டமிட்டு அரசியல் ரீதியாக அவரை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த தகவலை பரப்பி வருகிறார். 
 
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காத நிலையில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அருள் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
எனவே, பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் மீது ஆதாரமற்ற பொய் செய்தியை பரப்பி வரும் அருள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும்,
 
இதே போன்று எசனை கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா தலைமையில், அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தலிடம் அளித்த மனு விவரம்:   
 
பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையில், அவர் மீது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வழக்குரைஞர் அருள் என்பவர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.
 
இதற்கு ஆதாரமாக மோசடியாக உருவாக்கப்பட்ட ஒரு ஆடியோவை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் எம்.எல்.ஏ-வுக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்.
 
பெரம்பலூர் மாவட்ட பெண்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடுத்தார்கள்.
 
 புகார்மீது நடவடிக்கை எடுக்க மா.கம்யூ வலியுறுத்தலி மனு: 
 
பெரம்பலூரில் பெண் வீடியோ எடுத்து மிரட்டிய விவகார வழக்கில் தொடர்புடையை நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க மா.கம்யூ வலியுறுத்தியுள்ளது.
 
பெரம்பலூர் மா.கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு சார்பில் ஆட்சியர் (பொ) அழகிரிசாமியிடம் மனு அளிக்கப்பட்டது, 
 
அதில், வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் ஆசை வார்த்தகளை கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் கண்காணிப்பில் நேரடி விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும். 
 
அதற்கு முன்பாக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பெண் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். 
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்களிடம் புகார் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளித்து, சட்ட உதவி வழங்கி, குற்றம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி நேர்மையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!