Thunderstorm near Perambalur: One killed, another injured!

ரஞ்சித்குமார்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அசூர் வட்டம், அசூர் சேர்ந்த கிளார்க் மகன் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (21),
தாண்டமுத்து மகன் சின்னு(என்கிற) மேகநாதன் வயது 21. இன்று மதியம் 2மணியளவில் இருவரும் மீன் பிடிப்பதற்காக அசூர் – ஆய்குடி இடையே உள்ள ஏரியில் மீன் பிடிம்து கொண்டிருந்தனர். மாலை 5மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இடி ரஞ்சித்குமார், மேகநாதன் 2 பேர் மீதும் விழுந்ததில், மேகநாதன் படுகாயம் அடைந்தார். ரஞ்சித்குமாரை ஏரியில் தேடினர். நீண்ட தேடலுக்கு பிறகு ரஞ்சித்குமார் உடல் ஏரியில் கிடைத்தது.
காயமடைந்த மேகநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ரஞ்சித்குமாரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிகிச்சை பெற்று வரும் மேகநாதன்
விளம்பரங்கள்: